தாஜூடினின் நண்பர் உள்ளிட்ட 6 பேரின் வங்கிக் கணக்குகள் பரிசீலனை

0
99

wasim-thajudeenரகர் வீரர் வசிம் தாஜூடினின் கொலை தொடர்பில் தாஜூடினின் நண்பர் உள்ளிட்ட ஆறு பேரின் வங்கிக் கணக்கு விபரங்களை பரிசீலனை செய்ய அனுமதிக்குமாறு புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் கோரியுள்ளனர்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் இதுவரையிலான காலப் பகுதியில் ஆறு பேரின் வங்கிக் கணக்கு விபரங்களை வழங்குமாறு 15 நிதி நிறுவனங்களின் முகாமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தாஜூடின் கொலை குறித்த வழக்கு இன்று மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

-ET-

LEAVE A REPLY