காத்தான்குடி தள வைத்தியசாலையில் Physiotherapy பிரிவு

0
163

Sibly Farook Kurukkalmadamகாத்தான்குடி தள வைத்தியசாலையை பெளதீக ரீதியாகவும், ஆளணி ரீதியாகவும் அபிவிருத்தி செய்யும் பொருட்டு பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருவதோடு, கடந்த காலங்களில் காத்தான்குடி தள வைத்தியசாலையில் புதிதாக பல சிகிச்சை பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான விசேட வைத்தியர்களும் ஒன்றன் பின் ஒன்றாக பல அர்ப்பணிப்புடன் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு கொண்டுவரப்படுகின்றார்கள். பெளதீக ரீதியாகவும் ஆளணி ரீதியாகவும் அபிவிருத்தி செய்யும் பொருட்டு அண்மைக்காலமாக மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக்கின் முயற்சியினால் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கடந்த இரண்டு மாதகாலப் பகுதியினுள் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு புதிதாக பொது சத்திர சிகிச்சை நிபுணர், மனநோய் வைத்திய நிபுணர் மற்றும் சிறு பிள்ளைகளுக்கான வைத்திய நிபுணர்கள் என மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக்கின் முயற்சியினால் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதும் பாராட்டத்தக்கதோர் விடயமாகும்.

இதன் அடுத்த கட்டமாக காத்தான்குடி தள வத்தியசாலையில் physiotherapy unit ஒன்றை ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பிரதி சுகாதார அமைச்சர் கெளரவ பைசல் காசிம் அவர்களின் ஒத்துழைப்புடனும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக்  மேற்கொண்ட தனிப்பட்ட முயற்சியினாலும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கெளரவ நசீர்  சிபாரிசில் காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr. ஜாபிர்  தலைமையில் இயங்கும் தள வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவின் விடாமுயற்சியினாலும் காத்தான்குடி தள வைத்தியசாலையில் physiotherapy Unit ஒன்றை அமைப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதுடன் physiotherapy Unit தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு Physiotherapists ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்குரிய பகுதியை அமைக்கின்ற இடம் சம்பந்தமாக கலந்துரையாடலொன்றிற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக்  அண்மையில் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

இனிவரும் காலங்களில் வெளியூர்களுக்கு சென்று சிகிச்சைகளைப் பெறுவதற்காக ஏற்படும் நேர விரயங்கள் மற்றும் பணவிரயங்கள் தவிர்க்கப்படுவதோடு, பொதுமக்களின் நலன்கருதி இன்னும் பல புதிய சிகிச்சை பிரிவுகளும் அப்புதிய பிரிவுகளுக்கான விசேட வைத்திய நிபுனர்களை கொண்டுவருவதற்குமான முயற்சிகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக்  முன்னெடுத்து வருகின்றார். அதில் மிக முக்கியமாக அடுத்த கட்டமாக மகப்பேற்று நிபுணர் ஒருவரை பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

4 6 7 1. Cover Photo

LEAVE A REPLY