காயத்துக்கு ஆபரேஷன் செய்கிறார் நெஹரா

0
96

201605250941146186_operation-is-injuries-ashish-nehra_SECVPFஇந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் 37 வயதான ஆஷிஷ் நெஹரா, இந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடினார். கடந்த 15-ந்தேதி பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தின் போது வலது கால் முட்டியில் காயமடைந்தார்.

அதன் பிறகு எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து விலகினார். இந்த நிலையில் காயத்துக்கு லண்டனைச் சேர்ந்த பிரபல எலும்புமுறிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆண்ட்ரூ வில்லியம்சனிடம் ஆலோசனை நடத்தினார். அவர் காயத்துக்கு ஆபரேஷன் செய்ய அறிவுறுத்தி இருக்கிறார். இதையடுத்து நெஹராவுக்கு விரைவில் ஆபரேஷன் நடக்க இருக்கிறது.

LEAVE A REPLY