அமெரிக்காவில் ஸ்கை டைவிங் சுற்றுலா விமானம் மோதி, தீப்பிடித்தது: 5 பேர் பலி

0
143

201605250329283650_Sky-diving-tourism-in-the-US-The-aircraft-caught-fire-after_SECVPFஅமெரிக்காவில் ஹவாய் தீவில் நேற்று முன்தினம் ‘ஸ்கை டைவிங்’ சுற்றுலா விமானம் (‘ஸ்கை டைவ் காயை’ நிறுவனத்துக்குரியது) ஒன்றில் விமானி, பயிற்சியாளர்கள் 2 பேர், ஒருவர் பின் ஒருவராக குதிக்க இருந்த 2 பேர் என 5 பேர் சென்றனர்.

அந்த விமானம் எதிர்பாராத விதமாக, போர்ட் ஆலன் விமான நிலையத்துக்கு வெளியே மோதி தீப்பிடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். ஆனால் அவரது உயிரும் வழியிலேயே பிரிந்து விட்டதாக, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறிவித்தனர்.

இதுபற்றி ‘ஸ்கை டைவ் காயை’ நிறுவனத்தின் தலைவர் டேவிட் டிம்கோ கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார். விசாரணை நடந்துவரும் நிலையில், இப்போது எதுவும் கூற இயலாது என்று குறிப்பிட்ட அவர், பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.

விபத்துக்குள்ளான விமானம் செஸ்னா, ஒற்றை என்ஜின் கொண்டது. விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இந்த விபத்து நடந்த சிறிது நேரத்தில் ஓஹூ தீவில் இன்னொரு சிறிய விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் காயம் அடைந்தார். அவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

LEAVE A REPLY