காத்தான்குடியில் ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வர்த்தகர் கைது

0
151

(விசேட நிருபர், அஸ்மி )

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வர்த்தகர் ஒருவரை மட்டக்களப்பு போதைவஸ்து தடுப்பு பொலிசார் கைது செய்துள்ளனர்.

(23.5.2016) திங்கட்கிழமை மாலை இவர் காத்தான்குடி ஆறாம் குறிச்சி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு போதைவஸ்து தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி ஐ.பி.வஹாப் தலைமையில் சென்ற வஹாப் உட்பட்ட பொலிஸ் குழுவினர் இவரை கைது செய்துள்ளனர்.

காத்தான்குடி ஆறாம் குறிச்சி அமானுல்லா வீதியில் வசிப்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தகரிடமிருந்து 240 மில்லி கிறாம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நகர் காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மேற்படி நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY