ஆஸ்திரேலிய நகர் ஒன்றில் அவசர நிலை அறிவிப்பு

0
93

151008164006_vampi_2866699hஆஸ்திரேலிய மாநிலத்தின் நியூ சவுத் வேல்ஸின் அதிகாரிகள் பல்லாயிரக்கணக்கான வௌவால்களால் முற்றுகையிடப்பட்டுள்ள பேட்மன்ஸ் பே நகரத்திற்கு உதவ அவசர நிலையை அறிவித்துள்ளனர்.

வௌவால்கள் தொடர்ந்து எழுப்பும் சத்தம், அவைகளின் துர்நாற்றம் மற்றும் கழிவுகள் என அனைத்தும் தங்களின் வாழ்க்கையை துயரமாக்குவதாக பேட்மன்ஸ் பே நகர வாசிகள் தெரிவிக்கின்றனர்.

பறக்கும் நரிகள் என்று அழைக்கப்படும் இந்த வௌவால்களை இடமாற்றம் செய்வதற்கு 1.8 மில்லியன் டாலர்களை செலவு செய்ய திட்டமிட்டு வருகின்றனர் அம்மாநில அதிகாரிகள்.

இந்த வௌவால் கூட்டங்கள் பேட்மன்ஸ் பேயில் உள்ள மரங்களின் பூக்களால் கவர்ந்திழுக்கப்படுகின்றன. இந்த பறக்கும் நரி வௌவால்கள் ஆஸ்திரேலியாவில் மிகவும் அழிவின் விளிம்பில் இருக்கக்கூடிய ஒரு இனமாகும்.

LEAVE A REPLY