மியான்மரில் தனியார் சுரங்கத்தில் நிலச்சரிவு: 12 பேர் உயிரிழப்பு

0
130

151226064253_myanm_2866697gவட மியான்மரின் தொலைதூர பகுதியில் அமைந்திருக்கும் ஜேட் நிறுவனத்திற்கு சொந்தமான சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு குறைந்தது 12 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

ஹபாகந்த் பகுதியில் இருக்கும் இந்த சுரங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சுரங்கத்தில் புதையுண்டு போயிருக்கலாம் என உள்ளூர் அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

ஆண்டிற்குப் பல பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட ஜேட் தொழிற்சாலை சுரங்கம் ஒழுங்காக முறைப்படுத்தப்படவில்லை. மேலும், அங்கு நிலச்சரிவு சம்பவங்கள் பொதுவானவை.

மிகப்பெரிய ஸ்திரமற்ற கற்குவியல்களை ஜேட் சுரங்கம் உற்பத்தி செய்கிறது.

அந்த கற்குவியல் கழிவுகள் மீது மாணிக்கக்கல்லை தேடும் பணியில் சுரங்க பணியாளர்கள் ஈடுபடுவார்கள்.

கடந்தாண்டு நடந்த இரு வெவ்வேறு நிலச்சரிவு சம்பவங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-BBC-

LEAVE A REPLY