குடிமகனுக்கு 2500 டாலர் சம்பளம் வழங்கும் உலகின் பணக்கார நாடு

0
112

201605241541390267_One-of-the-Worlds-Richest-Countries-Is-Voting-on-Whether-to_SECVPFசுவிட்சர்லாந்து நாட்டில் பணிக்கு சென்றாலும், செல்லாவிட்டாலும் ஒவ்வொரு குடிமகனுக்கும் நிரந்தரமாக மாத வருமானத்தை அளிக்கும் புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. உலகளவில் எந்த நாடும் அறிமுகப்படுத்தாத திட்டத்தை சுவிஸ் அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள குடிமக்கள் பணிக்கு சென்றாலும், செல்லாவிட்டாலும் மாதந்தோறும் 2,500 டாலர் ஊதியத்தை அரசே வழங்கும். குழந்தைக்கு 625 டாலர் வழங்கப்படும்.

இதன் மூலம், எந்தவிதமான நிபந்தனையும் இன்றி அனைத்து குடிமக்களும் நிரந்தரமான மாத ஊதியம் பெற வழி வகை செய்யப்படும்.

புதிதாக அறிமுகமாகமுள்ள இந்த திட்டத்திற்கு நேற்று சுவிஸ் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் எந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தினாலும், அதற்கு பொதுமக்களின் ஒப்புதல் அவசியம்.

எனவே, இந்த புதிய சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு வரும் ஜூன் 5-ம் தேதி நடைபெற உள்ளதாகவும், பெரும்பான்மையான மக்கள் இதற்கு ஆதரவு அளித்தால், இந்த சட்டம் உடனடியாக அமுலுக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY