அரநாயக்கவில் மற்றுமோர் அனர்த்தம்: 15 பேர் வைத்தியசாலையில்

0
90

13238967_10153407577161467_465852014137763666_n-620x330அரநாயக்க – மாவனெல்ல பிரதான வீதியில் பொல் அம்பேகொட பிரதேசத்தில், இன்று(24) தனியார் பஸ்கள் இரண்டு, ஒன்றோடு ஒன்று மோதியே விபத்துக்குள்ளாகியதில் இரு சாரதிகள் உட்பட15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் திப்பிட்டிய அரநாயக்க மாவட்ட வைத்தியசாலை மற்றும் மாவனெல்ல ஆதர வைத்தியசாலை ஆகிய இரு வைத்தியசாலைகளிலும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இதனால், எலஹபிடிய சாமசர மலையில் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகளை ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தப்பிரதேசத்தில் வானங்களை செலுத்தும் போது, கூடுதல் அவதானத்தை செலுத்துமாறும் பொலிஸார், சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

-ET-

LEAVE A REPLY