வியட்நாம் மீதான ராணுவ தடை நீக்கம்: அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவிப்பு

0
120

obama_2600093hவியட்நாம் மீதான ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி தடை முழுமையாக நீக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியை சீனா சொந்தம் கொண் டாடி வருவதற்கு பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின் றன. எனினும் அப்பகுதியில் ராணுவ நிலைகளை சீனா உருவாக்கி வருவதால் பதற்றம் நீடிக்கிறது. இந்த சூழலில் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரமாக எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக பகையை மறந்து வியட்நாமுடன் நட்புறவை வளர்க்கும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது.

இதற்காக 3 நாள் பயணமாக வியட்நாம் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா தலைநகர் ஹனோயில் அந்நாட்டு அதிபர் டிரான் டாய் குவாங்கை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார். பின்னர் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ஒபாமா, ‘‘கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வியட்நாம் மீது விதிக்கப்பட்டிருந்த ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி தடையை அமெரிக்கா முழுமையாக விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளது. சீனாவை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படவில்லை. வியட்நாம் அரசுடன் சுமுகமான உறவு பேண வேண்டும் என்பதற்காக இம்முடிவு எட்டப்பட்டது. இரு நாட்டுக்கும் இடையே நட்புறவை வலுப்படுத்துவதற்கான புதிய அத்தியாயம் தொடங்கப் பட்டுள்ளது’’ என்றார்.

LEAVE A REPLY