இலங்கை ரீதியாக 1500 அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது

0
216

be277e14-9522-4e43-8216-d4d7460fa32d(விசேட நிருபர் )

தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் இவ்வாண்டு சிரம சக்தி எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அகில இலங்கை ரீதியாக 1500 அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் எம்.எல்.என்.நைறூஸ் தெரிவித்தார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் இளைஞர் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியளார் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நேற்று (23.5.2016) திங்கட்கிழமை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் நைறூஸ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கடந்த 2015ம் ஆண்டு சிரம சக்தி எனும அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 28 அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற் கொள்ளப்பட்டன. இந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தலா ஒரு பிரதேச செயலாளர் பிரிவுக்கு இரண்டு வேலைத்திட்டங்கள் எனும் அடிப்படையில் இந்த 28 வேதை;திட்டங்களும் மேற் கொள்ளப்பட்டன.

இவ்வேலைத்திட்டம் கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு அது நிறைவு செய்யப்பட்டு இவ்வாண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் கையளிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டன.

இதற்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இதன் ஒவ்வொரு வேலைத்திட்டத்திற்கும் தலா ஒரு இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டது. அந்த நிதியினைக் கொண்டு இளைஞர் பாராளுமன்ற உறப்பிளர்கள் மற்றம் இளைஞர் கழகங்களின் பங்களிப்புடன் சிறப்பாக இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு நாடுபூராகவும் 668 இவ்வேலைத்திட்டங்கள் மேற் கொள்ளப்பட்டன.

அதே போன்று (2016) இவ்வாண்டு இந்த சிரம சக்தி எனப்படும் இந்த அபிவிருத்தி வேலைத்திட்டம் நாடு பூராகவும் 1500 வேலைத்திட்டங்கள் மேற் கொள்ளப்படவுள்ளன. இதற்காக ஒவ்வொரு வேலைத்திட்டத்திற்கும் தலா 75000 ரூபா நிதியினை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வழங்கவுள்ளது.

இந்த நிதியினைக் கொண்டு இளைஞர் கழகங்கள் மற்றும் பிரதேச இளைஞர் சம்மேளனம் என்பவற்றின் பங்களிப்புடன் மூன்று மடங்கு பெறுமதியிலான அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த வரும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 50க்கும் 60க்குமிடையிலனா வேலைத்திட்டங்கள் கிடைக்கப்பெறுமென எதிர் பார்ப்பக்கப்படுகின்றது. இன்னும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எத்தனை திட்டங்கள் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

இந்த திட்டத்தின் கீழ் வடிகான்கள் அமைத்தல் வீதி அமைத்தல் உட்பட பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர் கழக மறு சீரமைப்பு விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் 369 இளைஞர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 16000 இளைஞர் யுவதிகள் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.

அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் விஷேட தேவையுடையோருக்கான 4 இளைஞர் கழகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில் 200 விஷேட தேவையுடைய இளைஞர் யுவதிகள் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு புகலிடம், ஓஸானம், தரிசனம், மென்கப் ஆகிய விஷேட தேவையுடைய நிறுவனங்களின் மூமாக இந்த விஷேட தேவையுடையோருக்கான 4 இளைஞர் கழகங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற நிறுவனங்களில் இளைஞர் கழகங்களை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. கிராமமட்ட மற்றும் பிரதேச மட்ட இளைஞர் யுவதிகளுக்கு விளையாட்டு மற்றம் கலை கலாசார போட்டிகளில் அவர்களின் திறமையை வெளிக் கொனரும் பொருட்டு இந்த நடடிவடிக்கையினை எமது தலைமையகம் எடுத்துள்ளது.

விளையாட்டின் ஊடாக இன நல்லினக்கத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 7 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உப கரணங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல் வேறு இளைஞர் வேலைத்தில் பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டி வீதி நாடக பயிற்சி பட்டறை, பிரதேச மட்ட கள உத்தியோகத்தர்களுக்கான அறிவூட்டல் வேலைத்திட்டம், என பல வேலைத்திட்டங்கள் மு ன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஊடகவியாளர் சந்திப்பில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்கள்பபு மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்களான திருமதி நிஷாந்தி அருள்மொழி, மற்றும் திருமதி கலாராணி ஜேசுதாசன் உட்பட அதன் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY