பதினைந்து வருடங்களுக்கு பிறகு வெற்றியீட்டிய காத்தான்குடி பிரதேச செயலக அணிக்கு ஷிப்லி பாரூக் வாழ்த்து

1
196

( அஹமட் இர்ஷாட்)

6dc08351-39d4-4e5e-9f3c-f9bbbe52cc11மாவட்ட செயலகத்தால் நடாத்தப்பட்ட உதைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றியீட்டி மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட காத்தான்குடி பிரதேச செயலக உதைப்பந்தாட்ட அணி மாகாண மட்டத்தில் நடைபெறும் உதைப்பந்தாட்டப்போட்டியில் வெற்றி பெற்று தேசியரீதியில் நடைபெற இருக்கும் உதை பந்தாட்டப்போட்டியில் வெற்றி பெற தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், பொறியியலாளருமான ஷிப்லி பாரூக் தெரிவித்தார்.

போதியளவு வளங்களும் வாய்ப்புக்களும் இல்லாத நிலையில் காத்தான்குடி பிரதேச செயலக உதைப்பந்தாட்ட அணியானது பெற்றுள்ள வெற்றியானது உண்மையில் மிகப்பெரியதோர் சாதனையாகும். மாவட்ட செயலகத்தால் நடாத்தப்பட்ட உதைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றியீட்டி மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட காத்தான்குடி பிரதேச செயலக உதைப்பந்தாட்ட அணி மாகாண மட்டத்தில் நடைபெறும் உதைபந்தாட்டப் போட்டியில் வெற்றிபெற்று தேசிய ரீதியில் நடைபெற இருக்கும் உதை பந்தாட்டப்போட்டியில் வெற்றி பெற தனதுமனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக தெரிவித்த பொறியியலளர் ஷிப்லி பாரூக், இவர்களின் திறமைகளை மென்மேலும் வளர்த்துக்கொள்வதற்கு தேவையான வாய்ப்புக்களையும் வளங்களையும் பயிற்சிகளையும் வழங்க மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை தன்னால் முடிந்தளவு முயற்சி செய்து இன்ஷா அல்லாஹ் பெற்றுக்கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

மாவட்ட செயலகத்தால் நடாத்தப்பட்ட குறித்த உதைப்பந்தாட்டப் போட்டியில் 14 பிரதேச செயலகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் பங்கு பற்றியிருந்தன.

முதலாவது போட்டி கிரான் மற்றும் மட்டக்களப்பு அணிகளுக்கு இடையே நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தும் கிரான் பிரதேச செயலக அணி கலந்துகொள்ளாமை காரணமாக காத்தான்குடி பிரதேச செயலக அணி கால் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது .

கால் இறுதிப் போட்டியில் காத்தான்குடி பிரதேச செயலக அணி ஆரையம்பதி பிரதேச செயலக அணியுடன் மோதி 2-௦ என்ற அடிப்படையில் வெற்றியீட்டியதுடன் அரை இறுதிப்போட்டியில் 1-௦ என்ற அடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச செயலக அணியுடனும் வெற்றி பெற்றது .

இறுதிப் போட்டியில் காத்தான்குடி பிரதேச செயலக அணி மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவு அணியுடன் மோதியது. இதில் எந்த அணியும் கோல்களை போடாததால் பெனால்டி எனப்படும் தண்டனை உதை வழங்கப்பட்டது. இதில் காத்தான்குடி பிரதேச செயலக அணி 4-4 என்ற கோள்களை போட்டதுடன் மண்முனை வடக்கு பிரதேச செயலக அணி 4-2 என்றடிப்படையில் கோள்களை போட்டது.

இதனடிப்படையில் காத்தான்குடி பிரதேச செயலக உதை பந்தாட்ட அணி வெற்றயீட்டியதுடன் மட்டக்களப்பு மாவட்ட சம்பியன் அணியாகவும் தெரிவு செய்யப்பட்டதுடன் மாகாண மட்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

காத்தான்குடி உதைபந்தாட்ட அணியில் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்த சகல உதைபந்தாட்ட கழகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் காத்தான்குடி உதைபந்தாட்ட அணியை பிரதி நிதித்துவப்படுத்தியிருந்தமை விசேட அம்சமாகும் .

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில்யின் ஆலோசனையுடன் காத்தான்குடி பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எம்.ஜெலீலின் வழிநடாத்தலில் காத்தான்குடி உதைபந்தாட்ட அணி தெரிவு செய்யப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

காத்தான்குடி பிரதேச செயலக அணி மென்மேலும் வெற்றி பெற தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.

1 COMMENT

  1. 15 varudathitku pirahu than win pannuna eantral 2013 m aandu win panni provincial ku theriuwu seiappatathu KKY team illaya?

LEAVE A REPLY