காத்தான்குடி சிறுமி சூடு விவகாரம்: மஜீத் றப்பானி மற்றும் வளர்ப்புத் தாய் ஆகியோர் பிணையில் விடுதலை

0
175

(விஷேட நிருபர்)

Yusriகாத்தான்குடியில் 10 வயது சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் வளர்ப்புத்தாய் மற்றும் தந்தை மஜீத் றப்பானி ஆகிய இருவருக்கும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (24) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத் தாய் ஆகிய இருவரும் 25,000 ரூபாய் மற்றும் 4 சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தரம் 5இல் கல்வி கற்கும் 10 வயது சிறுமி அவரது வளரப்புத் தாயினால் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸாரினால் சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத் தாய் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் 13ம் திகதி கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்படத்தக்கது.

இதனுடன் தொடர்புடைய செய்திகளுக்கு இங்கே சொடுக்குங்கள்

LEAVE A REPLY