கல்முனை எச்.ஏ அஸீசின் ” ஜந்து கண்டங்களின் மண்” கவிதைத்தொகுப்பு வெளியீடு

0
134

4f6ff664-ec8e-4c6d-aa2d-9f5476eae664(அஷ்ரப் சமத்  )

முன்னாள் ஒஸ்ரியா நாட்டின் துாதுவா், பல்வேறு நாடுகளின் பிரதித் துாதுவா் செயலாளா் பதவிகளை வகித்து தற்பொழுது வெளிநாட்டு அமைச்சில் பணிப்பாளராக கடமை புரியும் கல்முனை எச்.ஏ அஸீசின் ” ஜந்து கண்டங்களின் மண்” எனும் கவிதைத் தொகுதி 26.05.2016ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் பிற்பகல் 04.45 மணிக்கு வெளியீட்டு வைபவம் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வு கவிஞா் தாசீம் அகமத் தலைமையில் நடைபெறும். சிறப்பு விருந்தினராக பேராசிரியா் எம். ஏ. நுஹ்மான், அறிமுகம் சட்டத்தரணி ஏ.எம். பாயிஸ், நூல் மீளாய்வு கலாநிதி சுமதி சிவமோகன், சிறப்புக் கவிதை காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத்தீன், கருத்துறை தம்பு சிவா, ஏற்புரை கவிஞா் எச்.ஏ அசீஸ் நிகழ்த்த உள்ளனா்.

பேராசிரியா் எம். ஏ. நுஹ்மான் அசீசைப் பற்றிய குறிப்பில்,

ஜனாப் அசீஸ் – கடந்த கால் நுாற்றாண்டுக்கு மேலாக வெளியுறவுப் பணி ஜந்து கண்டங்களைச் சுற்றவும் உலகளாவிய அனுவத்தைச் சேகரிக்கவும் தன் உலகப் பாா்வையை விஸ்தரிக்கவும் அவருக்கு அறிய வாய்ப்பினை வழங்கியிருக்கிறது. இத்தகைய வாய்ப்பு தமிழ் எழுத்தாளா்களுடன் மிகச் சிலருக்கே கிடைத்திருக்கிறது. அதன் மூலம் தமிழ் எழுத்து வளமும் வலுவும் பெற்றிருக்கிறது.

அவா்களைப்போல் கட்டுரை, கதைகளையன்றி, இவா் கவிதை வடிவத்தைக் கையேற்றிருக்கிறாா். அவரது அனுபவத்தை அவரது கவிதைகள் செறிவாக வெளிபடுத்துகின்றன.

LEAVE A REPLY