கிழக்கு மாகாண சபை பிரதிநிதிகளின் ஆளுமை விருத்தியை மதிப்பீடு செய்வதற்கான செயலமர்வு

0
152

13243898_601408886704642_6117257579788474771_oகிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட பிரதிநிதிகளின் ஆளுமை விருத்தியை மதிப்பீடு செய்வதற்கான செயலமர்வு இன்று (24) மாலை கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது .

மாகாண சபை பிரதிநிதிகளை வெளிநாடு பயணங்கள் மூலம் புதிய தொழில்நுட்ப திட்டங்களை பயிற்சிவித்து சிறந்த ஆளுமை மிக்க பிரதிநிதியாக தமது பிரதேசத்துக்கு சேவைகளை வழங்கும் நோக்கோடு இந்த செயலமர்வு ஆசிய மன்றத்தின் சிரேஷ்ட தொழில்நுட்ப ஆலோசகர் திரு. சுபாகரனால் ஆலோசனை வழங்கப்பட்டது .

மேலும் அவர் விளக்கமளிக்கையில், இவ்வாறன திட்டம் ஏற்கனவே வட மாகாண சபையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அதே திட்டத்தினை கிழக்கு மாகாண சபையினுடைய மக்கள் பிரதிநிதிகளின் ஆளுமை விருத்தியினை ஊக்குவிப்பது தொடர்பாக திரட்டப்பட்ட தகவல்களை ஆய்வு செய்யப்பட்ட பின்னர் ஒரு பொதுவான கொள்கை முன்மொழிவு தயாரிக்கப்பட்டு அவுஸ்திரேலிய தூதுவராலயத்திற்கு சமர்ப்பிப்பதன் மூலம் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் திரு. சுபாகரன் தெரிவித்தார்.

13227850_601408770037987_1048988592670262709_o 13243758_601408390038025_2300995910130846164_o 13247955_601408456704685_2148313143921518344_o 13268243_601408880037976_2395172014935547213_o

LEAVE A REPLY