கிழக்கிழங்கை முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தின் ஒன்று கூடல்

0
130

(விஷேட நிருபர்)

13260154_1196509170401551_2247091277177819091_nகிழக்கிழங்கை முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தின் ஒன்று கூடல் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன காரியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் அதன் உபதலைவர் எம்.ஹிதாயதுல்லாஹ் நளீமி தலைமையில் இடம்பெற்றது.

இலங்கை முஸ்லிம்கள் தற்போது எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் மற்றும் பிரச்சினைகள் சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டதுடன் குறிப்பாக, முஸ்லிம் சமூகம் சார்பாக புதிய அரசியல் யாப்பில் கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டிய விடயங்கள் சம்பந்தமாக ஆராயப்பட்டது. அத்துடன் இதனை நடைமுறைச் சாத்தியப்படுத்துவதற்கு தேவையான சமூக அழுத்தத்தினை பிரயோகிப்பது சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த சிவில் அமைப்புகளின் சம்மேளன பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டதாக அவ்வமைப்பின் இணைப்பாளர் ஏ.எல்.எம். ஸபீல் நளீமி தெரிவித்தார்.

13254362_1196509017068233_4434053501843745929_n

LEAVE A REPLY