“முன்னாள் பிரதித் தவிசாளர் சீனி முஹம்மத் அவர்களின் இழப்பு காத்தான்குடி மக்களுக்கு பெரும் இழப்பாகும்: இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

0
146

Hizbullahகாத்தான்குடியினுடைய முன்னாள் தவிசாளராகவும் பல்வேறுபட்ட சமூக நிறுவனங்களினுடைய நிருவாகத்திலும் மிக நீண்ட காலமாக கடமையாற்றிய முன்னாள் தவிசாளர் சீனி முஹம்மத்தின் மறைவு காத்தான்குடி மக்களுக்கு பெரும் இழப்பாகும் என மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சர் M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

சீனி முஹம்மட் குறிப்பாக காத்தான்குடி பிரதேச சபையினுடைய பிரதி தவிசாளராக இருந்த போதிலும் உண்மையிலேயே பிரதித் தவிசாளர் என்ற நிலையிலிருந்து பல்வேறு பட்ட பணிகளைச் செய்தவர். காத்தான்குடியின் பல்வேறு அபிவிருத்தி பணிகளுக்கு தன்னுடைய உதவி ஒத்தாசைகளை வழங்கியவர். மிக வேகமாகவும் சுறு சுறுப்பாகவும் நின்று செயற்பட்டவர்.

குறிப்பாக காத்தான்குடியினுடைய குப்பை பிரச்சனைகளைத் தீர்த்தது வைப்பதிலே அவர் பிரதித் தவிசாளராக இருந்து அந்தப் பணியை மிகச் சிறப்பாக செய்து முடித்தவர். அதே போன்று காத்தான்குடி மக்களுடைய காணிகளைப் பாதுகாப்பதிலும் ,பயங்கரவாத சம்பவங்களின் போது தன்னை அர்ப்பணித்து இரவு பகலாகப் பாடுபட்ட ஒருவர்.

இந்த சமூகத்திற்காக பாடுபட்டதற்காக பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டு மிக மோசமாகத்தாக்கப்பட்டு மரணித்து விட்டார் என்ற நிலையிலே அவரை வீதியிலே தூக்கி எறியப்பட்ட ஒருவர். அந்த அளவிலே இந்த சமூகத்திற்காக பாடுபட்ட ஒருவர்.

யுத்த காலங்களில் யாரும் காப்பாற்ற முன் வராத போது தன் உயிரையும், குடும்பத்தையும் துச்சமென நினைத்து சமூகத்திற்காக பாடுபட்ட சகோதரர் மர்ஹூம் சீனி முஹம்மத்தின் இழப்பு காத்தான்குடி மற்றும் அதை அண்மித்த பிரதேசங்களுக்கு பெரும் இழப்பாகும்.

நான் வெளிநாட்டில் இருப்பதன் காரணமாக அவரது ஜனாசாவில் கலந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அல்லாஹ்விடம் அவர்களுக்காக பிரார்த்திப்போமாக. அல்லாஹ் அவர்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களின் கப்றை சுவர்க்கப் பூஞ்சோலையாக ஆக்கி வைப்பானாக. அவருடைய குடும்பத்திற்கு என்னுடைய மனமார்ந்த ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். நாம் எல்லோரும் அவருக்காக பிரார்த்திப்போமாக.

LEAVE A REPLY