சிரியாவில் அடுத்தடுத்து 7 குண்டுவெடிப்புக்கள்; 101 பேர் பலி

0
86

Syriaசிரியாவில் குண்டுவெடிப்பில் சிக்கி 101 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் டமஸ்கஸுக்கு உட்பட்ட ஜப்லே மற்றும் டார்டஸ் நகரங்களில் குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று (23) திங்கட்கிழமை காலை 7.00 மணியில் இந்த இரு நகரங்களிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

மொத்தம் 7 சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. ஜப்லே நகரில் 53 பேரும், டார்டஸ் நகரில் 48 பேரும் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்துமே தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தாக்குதலுக்குள்ளாகியுள்ள இரு நகரங்களிலும் இதுவரை இம்மாதிரியான குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#News1st

LEAVE A REPLY