இயற்கை இடரில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு ஸ்ரீலங்கா ஷெட் நிறுவனத்தினால் சுமார் இரண்டு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆடைகள்

0
139

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
helpஏறாவூர் அபிவிருத்திக்கும் வலுவூட்டலுக்குமான மனித சேவைகள் நிறுவனத்தினால் (Serving Humanity through Empowerment and Development) இயற்கை இடரில் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் கல்விக்கு உதவும் முகமாக சுமார் இரண்டு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆடைகள் அனுப்பி வைக்கப்பட்டதாக அதன் தலைவர் கே. அப்துல் வாஜித் திங்கட்;கிழமை தெரிவித்தார்.

மேற்படி சிறுவர் ஆடைகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதற்காக ஏறாவூர் ஷெட் நிறுவன அலுவலகத்தில் திங்களன்று 23.05.2016 இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா ஷெட் நிறுவனத்தின் தலைவர் கே. அப்துல் வாஜித், பணிப்பாளர் சபை உறுப்பினரும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரியுமான ஏ.டபிள்யூ.எம் பவுஸ், நிருவாகக் குழுவைச் சேர்ந்த எம்.எல். பெரோஸ், ஏ.எம்.எம். நஸுர்தீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாட்டில் தற்போதைய சீரற்ற காலநிலையின் விளைவாக ஏற்பட்டுள்ள இயற்கை இடரினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு உதவும் நோக்குடன் இந்த ஆடைகள் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY