49 குளங்கள் சேதமடைந்துள்ளன

0
93

Spilling_Upper_Kotmale_Dam-415x260சீரற்ற காலநிலை காரணமாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்குட்பட்ட 49 குளங்கள் சேதமடைந்துள்ளதாக திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பிரதானி பிரபாத் வித்தாரண தெரிவித்துள்ளார்.

குருநாகல் மாவட்டத்தில் 19 குளங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 08 குளங்களும், அம்பாறை மாவட்டத்தில் 09 குளங்களும், திருகோணமலை மாவட்டத்தில் 03 குளங்களும், புத்தளம் மாவட்டத்தில் ஒரு குளமும் மொனராகலை மாவட்டத்தில் 3 குளங்களும் மழை காரணமாக சேதமடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

குளங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட நீரினால் பாரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படாத போதும் சில பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளார்.

-ET-

LEAVE A REPLY