முல்லேரியா கலவன்புராண விகார அகதிகளுக்கு முஸ்லிம் எய்ட் உணவு மற்றும் அவசர நிவாரணப் பொருட்கள் வினியோகம்

0
136

(அஸீம் கிலாப்தீன்)

c367b29b-7ca3-485d-a17f-6e9a1d787212களனி கங்கை பெருக்கெடுத்தமையினால் பல்லாயிரக் கணக்கில் மக்கள் தமது உடைமைகள் அனைத்தையும் இழந்து இடம் பெயர்ந்து பல்வேறு பொதுவிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலைகள்,விகாரைகள் பள்ளிவாசல்கள், பொதுகட்டடங்களில் தற்காலிகமாக தங்கியிருக்கும் இம் மக்களுக்கு அவசியமான அவசர நிவாணப் பொருட்களை பல்வேறு நிறுவனங்களும் விநியோகித்து வருகின்றன.

தனது நிவாரணப் பணிகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ள முஸ்லிம் எய்ட், உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்கள் அடங்கிய 200 பொதிகளை இன்று 20ம் திகதி ஜும் ஆ தொழுமைக்குப் பின்னர் முல்லேரிய கலவன்புராண விகார முகாமிலுள்ள இடம் பெயர்ந்த மக்களுக்கு வழங்கவிருப்பதுடன், வெல்லப்பிட்டிய வித்தியார்த்த மகாவித்தியாலயத்திலுள்ள முகாமிலுள்ள மக்களுக்கான பல்வேறு தேவைகளையும் நிறைவேற்றும் பொருட்டு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

நிவாரணப் பொருட்களை வழங்குவது மாத்திரமல்லாமல் அடுத்து வரும் நாட்களில் மக்கள் மீள தமது இடங்களுக்கு செல்வதற்கு உதவுவது மற்றும் இழந்துவிட்ட அவர்களது வாழ்வாதார முயற்சிகளை மீண்டும் ஆரம்பித்தல், அவர்களை மீளக்குடியமர்த்தல் போன்ற அடுத்த கட்டப் பணிகளுக்கும் முஸ்லிம் எய்ட் தயாராகி வருகின்றது.

LEAVE A REPLY