நீண்ட நாள் மேலதிக தரத்திற்கு அனுமதி கிடைக்காத அஹமட் ஹிராஸ் வித்தியாலயத்திற்கு அனுமதி பெற்றுக்கொடுத்த சிப்லி பாறுக்

0
176

b3129e12-b2be-4d1a-a16c-95f6680737f4மட்டக்களப்பு மாவட்டத்தின், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட கோறளைப்பற்று மேற்கு கோட்டக்கல்வி பிரிவில் அமைந்துள்ள மட்/மம/ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயம் – புனாணை 1996.01.01ஆந்திகதி ஆரம்பிக்கப்பட்டதோர் பாடசாலையாகும்.

இப்பாடசாலையானது 1-5 ஆம் தரம் வரை மாணவர்கள் கல்வி கற்கும் ஓர் பாடசாலையாகும். இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் 6 தொடக்கம் க.பொ.த. உயர்தரம் வரை கற்பதற்கு 3.6 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மட்/மம/றிதிதென்னை இக்ராஹ் வித்தியாலயத்திற்கு சென்று தங்களது மேலதிக கல்வியினை தொடர வேண்டிய இக்கட்டான நிலைமையில் தங்களது கல்வி நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பாடசாலையானது வாழைச்சேனை – கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ளதோடு, மட்/மம/றிதிதென்னை இக்ராஹ் வித்தியாலயத்திற்கு தங்களது மேலதிக கல்வி நடவடிக்கையினை மேற்கொள்ள செல்லும் மாணவர்கள் பிரதான வீதியினால் செல்லும்போது பல வாகன விபத்துக்களில் சிக்குவதாலும், மிகவும் வறுமையின்கீழ் தங்களது குடும்ப வாழ்க்கையினை வாழ்ந்துவரும் ஜெயந்தியாய மக்கள் தங்களது பிள்ளைகளும் கல்வியினை கற்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மேலதிக கல்வியினை தொடர்வதற்கு பாடசாலைக்கு அனுப்புவதற்குக்கூட வாகன போக்குவரத்திற்கு வசதியற்றவர்களாக தங்களது வாழ்க்கையினை நடாத்தி வருகின்றமை மிகவும் வேதனைக்குரியதோர் விடயமாகும்.

அத்தோடு, நாங்களும் இச்சமூதாயத்தில் கல்வி கற்றவர்களாக திகல வேண்டுமென்ற எண்ணத்துடன் 1-5 ஆம் தரம் வரை மட்/மம/ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயத்தில் கல்வி கற்றுவிட்டு 6 தொடக்கம் க.பொ.த. உயர்தரம் வரை கற்பதற்கு 3.6 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மட்/மம/றிதிதென்னை இக்ராஹ் வித்தியாலயத்திற்கு நடைபாதையாக சென்று கல்வி நடவடிக்கையினை மேற்கொள்கின்றனர் என்பது கவலைக்குரியதோர் விடயம்.

அன்மையில் இக்கிராமத்திற்கு திடீர் விஜயமொன்றினை மேற்கொண்ட மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்கள் அக்கிராமத்தில் வசிக்கும் மக்களின் துயரங்களை கண்டறிந்ததோடு, இக்கிராமத்தில் அமைந்துள்ள மட்/மம/ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயத்தையும் பார்வையிட சென்றிருந்தார்.

அப்போது பாடசாலையின் அதிபர், பாடசாலை அபிவிருத்தி சங்கம், கிராம அபிவிருத்தி சங்கம், விவசாய சங்கம், மீனவர் கூட்டுறவு சங்கம், விளையாட்டுக்கழகம், இளைஞர் கழகம் மற்றும் ஜூம்ஆ பள்ளிவாசல் ஆகியவற்றின் நிருவாகிகள் மட்/மம/ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் நிலைமையினையும் மேலதிக கல்வியினை தொடர்வதற்காக 3.6. கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மட்/மம/றிதிதென்னை இக்ராஹ் வித்தியாலயத்திற்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை காணப்படுவதாகவும் மாணவர்களின் எதிர் காலத்தினை கருத்திற்கொண்டு, மட்/மம/ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயத்தில் 6-9 ஆம் தரம் வரை மாணவர்கள் கல்வி கற்பதற்கு மாகாண கல்வி அமைச்சில் அனுமதியினை பெற்றுத்தருமாறும் கேட்டுக்கொண்டனர்.

இப்பாடசாலையினை 6-9 ஆம் தரம் வரை ஆரம்பிப்பதற்கு கடந்த 2014.01.31ஆந்திகதி பாடசாலையின் அதிபர் முஹாஜிரின் அவர்களால் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தினூடாக மாகாண கல்வித்திணைக்களம் மற்றும் மாகாண கல்வி அமைச்சு ஆகியவற்றிட்கு அனுமதி கேட்டு ஆவணங்கள் அனுப்பப்பட்டும் இதுவரை கிடைக்கவில்லை என்பதனையும் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்களுக்கு ஊர் அமைப்புக்கள் தெரியப்படுத்தினர்.

இதனை கவனத்திற்கொண்ட  சிப்லி பாறுக் மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் இப்பாடசாலையின் நிலைமையினை தெளிவுபடுத்தி இதற்கான அனுமதியினை பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதியளித்தார்.

அதற்கமைவாக மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக்  மேற்கொண்ட முயற்சியினால் மட்/மம/ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயத்தில் 6-9 ஆம் தரம் வரை 2016.01.01ஆந்திகதி தொடக்கம் மாணவர்கள் கல்வி கற்பதற்கான அனுமதியினை பெற்றுக்கொடுத்தார்.

மட்/மம/ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயத்தில் 6-9 ஆம் தரம் வரை மாணவர்கள் கல்வி கற்பதற்கு அனுமதி பெற்றுக்கொடுத்தமைக்கு பாடசாலையின் அதிபர் முஹாஜிரின், பாடசாலை அபிவிருத்தி சங்கம், ஜெயந்தியாய கிராம அபிவிருத்தி சங்கம், ஜெயந்தியாய மீனவர் கூட்டுறவு சங்கம், ஜெயந்தியாய D-3 விவசாய அமைப்பு, ஜெயந்தியாய சல்சபீல் விளையாட்டுக்கழகம், ஜெயந்தியாய சல்சபீல் இளைஞர் கழகம் மற்றும் ஜெயந்தியாய மஸ்ஜிதுல் தக்வா ஜூம்ஆ பள்ளிவாசல் ஆகியவற்றின் நிருவாகிகள் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக்கிக்கு நேரில்சென்று தங்களது ஊர் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.

LEAVE A REPLY