காலவரையின்றி வாழ்நாள் முழுவதும் அதிபர் ஆட்சி செய்யும் சட்டதிருத்தம்: தஜிகிஸ்தானில் வாக்கெடுப்பு

0
92

201605230537232173_Tajikistan-vote-on-allowing-president-to-rule-for-life_SECVPFதஜிகிஸ்தான் அதிபர் எமோமலி ரஹ்மான்(63) சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்தது முதல் அதிபராக இருந்து வருகிறார். கடந்த 24 ஆண்டு கால ஆட்சியில் அனைத்து எதிர்க்கட்சியினரையும் அவர் ஒழித்து கட்டிவிட்டார்.

இந்நிலையில் தஜிகிஸ்தான் நாட்டில் அதிபருக்கு முழு அதிகாரம் அளிக்கு வகையிலான அரசியலமைப்பு சட்டதிருத்தத்திற்கு அந்நாட்டில் நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் அதிபர் பதவிக்கான குறைந்தபட்ச வயது 35 வயதிலிருந்து 30-ஆக குறைக்கும் அரசியலமைப்பு சட்டதிருத்தமும் ஒன்று. இந்த திருத்தம் தற்போது 29 வயதில் இருக்கும் அதிபர் ரஹ்மானின் மகன் 2020-ம் ஆண்டு நடைபெறும் அடுத்த அதிபர் தேர்தலில் பங்கேற்க ஏதுவாய் இருக்கும். இந்த வாக்கெடுப்பில் 88 சதவீதம் பேர் பங்கெடுத்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். தஜிகிஸ்தானில் மதவாத நடவடிக் கைகளைக் கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசே நடவடிக்கை எடுத்து வருகிறது.

மதவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அதிபர் இமோமாலி ரகுமான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி மத நிறுவனங்களின் தலையீட்டை முழுவதும் கட்டுப்படுத்தும் வகையில் இந்த திருத்தங்கள் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY