இந்தியாவில் உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி பத்து தொழிலாளிகள் பலி

0
129

201605231144393815_10-dead-after-landslide-in-Chakrata-Uttarakhand_SECVPFஇந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பத்துக்கும் அதிகமான தொழிலாளிகள் பலியானதாக தெரியவந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம், டேராடூன் மாவட்டத்தில் யமுனை ஆற்றங்கரையோரம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சக்ரதா பகுதியை ஒட்டியுள்ள டியோனி என்ற இடத்தில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவால் இப்பகுதியில் உள்ள பாறைகள் சில வீடுகளின் மீது உருண்டு விழுந்தன. இதனால் வீடுகள் பூமிக்குள் புதைந்தன. இதனால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி பத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. காயமடைந்த மேலும் சிலர் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

LEAVE A REPLY