பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நேசக்கரம் நீட்டுவோம்!

0
181

Muhasaba aidஅன்பான சொந்தங்களே!

கடந்த சில நாட்களாக நாட்டின் பல பாகங்களிலும் நிலவிய அசாதாரண கால நிலையினால் வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களினால் நமது சகோதரர்கள் உடல், உள ,பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வருகின்றனர்..

அல்லாஹ்வின் உதவியுடன் இவர்களுக்கான உணவு நிவாரணப்பொருட்கள் பல ஊர் மக்களினாலும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அங்கு பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்விக்கு இதுவரை எதுவித நிவாரணமும் வழங்கியதாக தெரியவில்லை.

ஆகவே எமது முஹாசபா மீடியா நெட்வொர்க் “பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விக்கு நேசகரம் நீட்ட முன்வந்துள்ளது.

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியோடும் எமது உதவும் உள்ளம் கொண்ட சகோதரர்களின் ஆதரவோடும் இம் மாணவர்களுக்கான புத்தகப் பைகள், அப்பியாச கொப்பிகள், பாடசாலை கற்றல் உபகரணங்கள் போன்றவற்றை வழங்க தீர்மானித்துள்ளது.

இதற்காக பாரிய நிதி தேவைப்படுகிறது. அன்பான உதவும் உள்ளம் கொண்ட சகோதரர்களே!

இம் மாணவர்களின் கல்விக்கு உங்கள் நேசக்கரங்களை நீட்டுங்கள்.

“கல்விக்கு நேச கரம் நீட்டுவோம் இறை அன்பை பெற்றிடுவோம்.”

மேலதிக தொடர்புகளுக்கு:

சகோதரர். ஜுனைட்.எம்.பஹ்த் – 0770741849
சகோதரர் எம்.எஸ்.எம்.சாஜித்- 0773273718
சகோதரர் ஜே.எம்.அம்ஜத்- 0773472711

LEAVE A REPLY