தொகு­தி­வா­ரி­யான கலப்புத் தேர்தல் முறை முஸ்லிம்களுக்கு பாதிப்பாக அமையலாம்

0
166

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணிகள் சம்­மே­ள­னத்தின் ஸ்தாபகர் தின நிகழ்வில் சம்பந்தன்

R. Sampanthan‘முஸ்­லிம்கள் நாடு முழு­வதும் பரந்து வாழ்­வதால் தொகு­தி­வா­ரி­யான கலப்புத் தேர்தல் முறை அவர்­க­ளது பிர­தி­நி­தித்­து­வத்­துக்கு பாதிப்­பாக அமை­யலாம்.

அதனால் முஸ்­லிம்கள் வேறு­பா­டு­களை மறந்து ஒற்­று­மை­யாகச் செயற்­பட்டு தமது பிர­தி­நி­தித்­துவ உரி­மையைப் பாது­காத்துக் கொள்ள வேண்டும்.

‘முஸ்­லிம்கள் சிந்­தித்து செய­லாற்ற வேண்டும். நாமும் சிறு­பான்மைச் சமூகம் என்ற ரீதியில் இது விட­யத்தில் தேவை­யான உத­வி­களை நல்கத் தயா­ராக இருக்­கிறோம்’ என எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணிகள் சம்­மே­ள­னத்தின் ஸ்தாபகர் தின நிகழ்வு நேற்று முன்­தினம் மாலை கொழும்­பி­லுள்ள தபால் திணைக்­கள தலைமைக் காரி­யா­ல­யத்தின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்­றது.

இந்­நி­கழ்வில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் ‘முஸ்­லிம்கள் ஒற்­று­மைப்­ப­டு­வதன் மூலமே தமது பிர­தி­நித்­துவ உரி­மை­களைப் பாது­காத்துக் கொள்ள முடியும். இதற்­காக நாமும் எம்­மா­லான உத­வி­களை வழங்­குவோம். அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணி­களின் சம்­மே­ளனம் வடக்கு கிழக்கு உட்­பட நாட்டின் அனைத்துப் பிர­தேச முஸ்­லிம்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கி­றது. முஸ்லிம் லீக்கின் சேவைகள் முஸ்லிம் மக்கள் அனை­வ­ரையும் சென்­ற­டை­கின்­றன.

வட, கிழக்கில் முஸ்­லிம்­களில் 1/3 பகு­தி­யினர் வாழ்­கின்­றனர். ஏனைய 2/3 பகு­தி­யினர் வட கிழக்­குக்கு வெளியே வாழ்­கி­றார்கள். நாடெங்கும் பரந்­து­வாழும் முஸ்­லிம்கள் தங்­க­ளது பிர­தே­சங்­களில் தங்­க­ளது அடை­யா­ளங்­களை உறு­திப்­ப­டுத்திக் கொண்டு சிறந்த விழு­மி­யங்­க­ளுடன் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள்.

அர­சாங்­கத்தின் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களில் முஸ்­லிம்கள் பங்­கா­ளர்­க­ளாகச் செயற்­பட்டுக் கொண்­டி­ருப்­பது மகிழ்ச்­சியைத் தரு­கி­றது. எனது பாராட்­டுக்­களைத் தெரி­வித்துக் கொள்­கிறேன்.

முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­துவம் பாரா­ளு­மன்­றத்­திலும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளிலும் கணி­ச­மான அளவு உள்­ளது என்­றாலும் தேர்தல் முறையில் மாற்­றங்கள் வரும்­போது தொகு­தி­வா­ரி­யான கலப்பு முறைத் தேர்­தலில் சிறு­பான்மைக் கட்­சிகள் மற்றும் சிறிய கட்­சி­க­ளுக்கு பாதிப்­புகள் ஏற்­படும். கலப்பு தேர்தல் முறை சிறு­பான்­மை­யி­ன­ருக்கு நன்மை பயக்­குமா என்று நாம் சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது.

நல்­லாட்சி அர­சாங்கம் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தி புதிய பய­ண­மொன்­றினை ஆரம்­பித்­துள்­ளது. இதில் நாம­னை­வரும் பங்­கா­ள­ராவோம். ஒன்­று­பட்ட இலங்­கையில் நாம் சமா­தா­ன­மா­கவும் ஒற்­று­மை­யா­கவும் வாழக் கூடி­ய­தாக புதிய அர­சி­ய­ல­மைப்பு அமை­ய­வேண்டும் மக்­க­ளது சக­வாழ்வு அடிப்­படை உரி­மைகள் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

இரு பெரும் அர­சியல் கட்­சிகள் ஒன்­றி­ணைந்து தேசிய அர­சாங்கம் அமையப் பெற்­றுள்­ளது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ரான ஜனா­தி­ப­தியும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வ­ரான பிர­த­மரும் ஒற்­று­மை­யுடன் தமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

ஜன­நா­ய­கத்தை நிலை­நி­றுத்­து­வ­தற்கும் இன நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

இந்நாட்டின் இளைஞர்கள் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள் என்றார்.

இரா.சம்பந்தன் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் தலைவர் பி.எம்.பாரூக்கினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

#Vidivelli

LEAVE A REPLY