சாய்ந்தமருதில் மூன்றாவது நாளாக நிவாரணம் சேகரிப்பு; தில்சாத் தலைமையில் இளைஞர்கள் களத்தில்!

0
233

(அஸ்லம் எஸ்.மௌலானா)

A (32)வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியடைந்துள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களில் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து இன்று (22) ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாக நிவாரணம் சேகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற அவசர கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய வெள்ளிக்கிழமை தொடக்கம் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

A (54)சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் வேண்டுகோளின் பேரில் பள்ளிவாசல் தலைவரினால் அவசரமாக கூட்டப்பட்ட இக்கூட்டத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி அப்துல் கப்பார், கல்முனை மாநகர பிரதி முதல்வர் அப்துல் மஜீத், பெரிய பள்ளிவாசல் செயலாளர் எம்.ஏ.மஜீத், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.தில்சாத், மறுமலர்ச்சி மன்றத்தின் செயலாளர் எஸ்.எம்.கலீல், உலமா சபையின் சார்பில் அப்துல் ஜப்பார் மௌலவி, சாய்ந்தமருது வர்த்தக சங்கத் தலைவர் ஏ.ஏ.சலீம் (மரைக்காயர்), செயலாளர் எம்.எம்.சத்தார், அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் இணைப்பாளர் மாங்குட்டி ஜுனைதீன், பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் இணைப்பாளர் நௌபர் ஏ.பாவா (மரைக்காயர்), தக்வா ஜும்ஆப் பள்ளிவாசல் செயலாளர் யூ.கே.காலிதீன் உட்பட பொது அமைப்புகள் மற்றும் இளைஞர் கழகங்களின் பிரதிநிதிகளும் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

இக்கூட்டத்தின்போது வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியடைந்துள்ள மக்களுக்காக சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களில் மக்களிடம் இருந்து நிதி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை சேகரித்து அனுப்புவதற்காக பள்ளிவாசல் தலைவர் தலைமையில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அனர்த்த முகாமைத்துவ செயலணி ஒன்று அமைக்கப்பட்டது.

A (29)அதன் பிரகாரம் வெள்ளிக்கிழமை ஜும்ஆவின்போது பெரிய பள்ளிவாசல் உட்பட நான்கு ஜும்ஆப் பள்ளிவாசல்களில் அனர்த்த நிவாரண நிதி சேகரிக்கப்பட்டதுடன் அன்றைய தினம் அஷர் தொழுகையைத் தொடர்ந்து விசேட துஆப் பிரார்த்தனையுடன் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.தில்சாத் தலைமையில் இளைஞர் கழகங்களின் பிரதிநிதிகள் வீதிகளில் களமிறங்கி வீடு வீடாகச் சென்று நிவாரணம் சேகரித்து வருகின்றனர்.

இதில் சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் முக்கியஸ்தர்களான எஸ்.எம்.கலீல், எம்.ஐ.எம்.இஸ்திகார், ஏ.ஜி.எம்.நிம்சாத், முஹம்மட ஹனீஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிவாரண சேகரிப்புக்கு அனைத்து பள்ளிவாசல்களின் நிருவாகங்கள், ஜம்மியத்துல் உலமா, சாய்ந்தமருது பிரதேச செயலகம், வர்த்தக சங்கம், கல்முனை பொலிஸ் நிலையம் என்பனவும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன.

A (31) A (43)

LEAVE A REPLY