காத்தான்குடி சம்மேளனத்தினால் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு

0
176

(விஷேட நிருபர்)

DSCN9812காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் றோட்டரிக்கழக அனுசரணையில் நிர்மானிக்கப்பட்ட வீடுகளிலுள்ள பயணாளிகளுக்கு காணி உறுதிப் பத்தரங்கள் நேற்று (21) சனிக்கிழமை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களினால் சம்ளேனத்தினால் வழங்கி வைக்கப்பட்டன.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் எம்.டி.ஹாலித் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் சம்மேளனத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.சபீல் நழீமி மற்றும் சம்மேளன நிருவாக உறுப்பினர்கள் காணிக்குழு அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

சுனாமி அனர்தத்தின் பின்னர் மர்ஹும் அகமது முகைதீன்(மொடன் ஹாஜியார்) என்பவரினால் அன்பளிப்பு செய்யப்பட்ட காணியில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் நோட்டரிக்கழக அனுசரணையில் நிர்மானிக்கப்பட்ட வீடுகளிலுள்ள பயணாளிகள் மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் ஹைறாத் நகரில் கொள்வனவு செய்யப்பட்ட காணிகளுக்கான உறுதிப் பத்தரங்கள் பயணாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.

இதில் 67 பயணாளிகளுக்கு இந்தக்காணி உறுதிப் பத்தரங்கள் வழங்கப்பட்டதாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.சபீல் நழீமி தெரிவித்தார்.

DSCN9804 DSCN9808 DSCN9816 DSCN9822 DSCN9825

LEAVE A REPLY