குப்பை கழிவுகளால் சூழப்பட்ட மைய்யவாடி; கவனத்திற் கொள்ளுமா காத்தான்குடி நகரசபை?

0
884

(ஜுனைட் எம்.பஹ்த்)

Kattankudy Maiyavaadi Kuppai 1காத்தான்குடி நகரசபைக்குற்பட்ட அரபு கலாசாலை வீதி, CTB பிரதான பஸ் நிலையத்திற்கு பின்புற பகுதியில் அமைந்துள்ள காத்தான்குடி அஷ்ஷெய்த் ஷெய்ன் மெளலானா பள்ளிவாயலுக்குச் சொந்தமான முஸ்லிம் மைய்யவாடி குப்பைகளும் கழிவுகளும் நிரம்பி அவ்வீதியால் பணிப்பதும் மைய்யவாடிக்குல் செல்லுவதும் பாரிய சிரமமாக உள்ளது.

காத்தான்குடி பிரதான வீதிக்கு செல்வதற்கு பாதசாரிகள் பயன்படுத்தும் பிரதானமான பாதை இதுவாகும். இப் பகுதிகளில் தினமும் பல தடவைகள் நகரசபை ஊழியர்களும், நகரசபை கழிவகற்றல் வாகனங்களும் இவ் வீதியால் பயணித்தாலும் இதனை இதுவரை யாரும் கவனத்திற் கொள்ளவில்லை.

நீண்ட நாட்களாக இவ் இடத்தில் குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் தேங்கி காணப்படுவதால் துர் நாற்றம் வீசுவதுடன், பல விதமான நோய்களுக்கான நுளம்புகள் உருவாகி வருகின்றன என அப்பகுதி மக்கள் விசனம் தெறிவிக்கின்றனர்.

எனவே, இது ஒரு சாதாரண பிரச்சினை அல்ல. மக்களின் உயிர் தொடர்பான பிரச்சினை. இதனால் ஒரு உயிரிழப்பு ஏற்பட்ட பின்னர் நடவடிக்கை எடுத்துப் பயனில்லை.

இது தொடர்பில் காத்தான்குடி நகரசபை செயலாளர் ஜே.சர்வேஸ்வரன், சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.நஸ்ரூத்தீன், சுகாதா பரிசோதகர்கர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

Kattankudy Maiyavaadi Kuppai 2 Kattankudy Maiyavaadi Kuppai

LEAVE A REPLY