ஆப்கன் தாலிபன் தலைவர் முல்லா அக்தார் மன்சூர் கொல்லப்பட்டார்?

0
169
mulla_mansour
கொல்லப்பட்டதாக சொல்லப்படும் முல்லா மன்சூர்

ஆப்கன் தாலிபன் தலைவர் முல்லா அக்தார் மன்சூர் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தத் தாக்குதலின் போது, முல்லா மன்சூர் இறந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

முல்லா அக்தார் மற்றும் மேலும் ஒருவரை குறிவைத்து நடந்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் பல ஆளில்லா விமானங்களை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

us_drone_flightஅமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனின் பேச்சாளர் ஒருவர், ”கடந்த ஜூலை மாதம் முதல் தாலிபன் அமைப்பின் தலைவராக முல்லா அக்தார் பொறுப்பெற்று கொண்டார். அமைதிக்கும், பொதுமக்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் அவர் அச்சுறுத்தலாக இருந்தார் ” என்று கூறியுள்ளார்.

தாலிபன் அமைப்பு கடந்த மாதம் காபூல் மற்றும் பிற நகரங்களை தாக்கி புதிய தாக்குதல்களை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.

2014 ஆம் ஆண்டில் ஆப்கனில் சர்வதேச படைகள் விலகிய பின் தாலிபன் அமைப்பு மீண்டும் வலுப்பெற்றதாகவும், 2001ல் பெரும் சக்தியாக இருந்த தாலிபன் அமைப்பை அமெரிக்க ஆதரவு பெற்ற படைகள் அதிகாரத்தில் இருந்து விரட்டி அடித்ததாகவும் பத்திரிகையாளர்கள் கூறிகின்றனர்.

#BBC

LEAVE A REPLY