இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வி: ஆண்டர்சன் அபார பந்துவீச்சு

0
213

243513இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் பேட்டிங்கில் சொதப்பிய இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 88 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் லீட்சில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 298 ரன் எடுத்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 91 ரன்னுக்கு சுருண்டு ‘பாலோ ஆன்’ பெற்றது. இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 1 ரன் எடுத்திருந்த போது, இரண்டாவது நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மையால் முன்னதாக முடிவுக்கு வந்தது.

நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணியின் கருணாரத்னே (7), கவுஷல் சில்வா (14), சண்டிமால் (8), கேப்டன் மாத்யூஸ் (5) மீண்டும் ஏமாற்றினர். குசால் மெண்டிஸ் (53) அரைசதம் எடுத்து திரும்பினார். தசன் ஷனகா (4), ஹெராத் (4) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். துஷ்மந்தா சமீரா, நுவான் பிரதீப் ‘டக்–அவுட்’ ஆனார்கள்.

243461இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 119 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது. எரங்கா (2) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5, ஸ்டீவன் பின் 3 விக்கெட் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1–0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட் வரும் 27ல் செஸ்டர்–லீ–ஸ்டிரீட் நகரில் துவங்குகிறது. இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்தின் ஆண்டர்சன் ஆட்டநாயகன் விருது வென்றார்.

கபில்தேவை முந்திய ஆண்டர்சன்

இலங்கை அணிக்கு எதிரான லீட்ஸ் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தினார் ஆண்டர்சன். இதையடுத்து, டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் சாய்த்த பவுலர்கள் வரிசையில் இந்தியாவின் கபில்தேவை (434 விக்.,) முந்தி, 6வது இடத்துக்கு முன்னேறினார் ஆண்டர்சன் (443).

LEAVE A REPLY