வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்காவின் 7.2 மில்லியனுடன் மேலும் 3 வருடகால உதவித் திட்டம்

0
205

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

USA America Flagவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவியாக அமெரிக்கா 7.2 மில்லியன் இலங்கை ரூபாவை வழங்குகின்றது. இதனுடன் மேலும் 3 வருடகால உதவித் திட்டம் ஒன்றையும் அமுல்படுத்தவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தூதரகம் இன்று (22) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையின் மேற்குப் பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்குப் பாதிப்பினைத் தொடர்ந்து போர்வைகள், படுக்கைகள், ஆடைகள் மற்றும் புறச் சுகாதாரப் பொதிகள் போன்ற உணவு சாராத பொருட்களுக்கான உடனடி அனர்த்த உதவியாக 7.2 மில்லியன் இலங்கை ரூபாவினை அமெரிக்கா வழங்கியுள்ளது.

மேலதிகமாக, சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவன அலுவலகத்தின் வெளிநாட்டு அனர்த்த உதவி அலுவலகத்துடன் இணைந்து கொழும்பு அமெரிக்கத் தூதரகம் வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சியினால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய சனத்தொகைக்குப் பாதுகாப்பான, அனர்த்தத்திற்கு நெகிழ்ச்சியான, குடிநீரை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட 144 மில்லியன் இலங்கை ரூபாய் மதிப்பீட்டுத் திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளது.

இந்த நிகழ்ச்சித் திட்ட அனர்த்தங்களின்போது உகந்த நீருக்கான நம்பகமான அணுகும் வசதிக்கு உதவும்.

தற்போதைய அனர்த்த சூழ்நிலையைக் கண்காணித்து வரும் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மக்களின் மேலதிக தேவைகளைக் கண்டறிவதற்கு இலங்கை அரசாங்கத்தின் அனர்த்த நிவாரண அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY