லயன் தொகுதிகள் வெடிப்பு – 147 பேர் இடம்பெயர்வு

0
241

damageஉடபளாத்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கோகம தோட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, லயன் குடியிருப்பு தொகுதிகள் வெடிப்புற்றுள்ளன.

எனவே 45 குடும்பங்களை சேர்ந்த 147 பேர் இடம்பெயர்ந்து புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரினால் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

“எங்களுக்கு தேவையான ஆரம்பகட்ட வசதிகள் யாவும் பூர்த்தியாகி உள்ளது. அடுத்த கட்டமாக எங்களுக்கு தற்காலிக வீடுகள் அமைப்பதற்கும் தொடர்ந்து நிரந்தர வீடுகளுக்கும் செல்ல சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாதிக்கப்பட்ட மக்கள் கோரியுள்ளனர்.

இதேவேளை, உடபளாத்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இரட்டைபாதை – நீவ்பீகொக் தோட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, குடியிருப்புக்கள் வெடிப்புற்ற நிலையில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர் இடம்பெயர்ந்து தோட்ட கலாச்சார மண்டபத்தில் தற்கலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

#Adaderana

LEAVE A REPLY