20 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ஆய்வுகூடங்கள் திறந்து வைப்பு

0
358

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

DSC_5157மீள் குடியேறிய திருகோணமலை சம்பூர் மாணவர்களின் நலன்கருதி 20 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வு கூடம் மற்றும் கணினிப் பிரிவு (Science Lab and Computer Unit) என்பவை வெள்ளிக்கிழமை (20) திறந்து வைக்கப்பட்டு பாடசாலை நிருவாகத்திடம் கையளிக்கப்பட்டன.

இந்த ஆய்வு கூடம் மற்றும் கணினிப் பிரிவு என்பனவற்றை இலங்கைக் கடற்படையும் டேவிட் பீரிஸ் நிறுவன குழுமமும் இணைந்து அமைத்திருந்தன. (Facilitated by Srilanka Navy and Dawid Peiris Group of Comapanies).

மேலும் சம்பூர் மகா வித்தியாலயத்தில் கற்கும் மாணவர்களில் 250 பேருக்கு டேவிட் பீரிஸ் நிறுவனத்தின் அனுசரணையில் பாடசாலை பைகளும் வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலை நிர்வாகத்தினரிடம் இவற்றைக் கையளிக்கும் நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கைசாப், கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ, மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி ஆகியோருட்பட டேவிட் பீரிஸ் நிறுவனத்தின் அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

DSC_5174 DSC_5198 DSC_5232 DSC_5263

LEAVE A REPLY