90ம் ஆண்டு இடம்பெயர்ந்த 58 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு

0
172

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

DSC_5023திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவு உப்பாறு கிராமத்தில் இருந்து 1990ம் ஆண்டு இடம்பெயர்ந்தவர்களில் 58 குடும்பங்களுக்கு வெள்ளிக்கிழமை (20) காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா 10 பேர்ச்சஸ் காணியும் அவற்றின் உரிமைத்துவத்திற்கான காணி உறுதிப் பத்திரமும் வழங்கி வைக்கப்பட்டது.

காணிச் சீர்திருத்த ஆணைக்குவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகளில் இருந்து 124 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 1990ம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பெயர் பதிவாகி இருந்த 58 குடும்பங்கள் முதலாவது கட்டத்தில் காணி உறுதிப்பத்திரங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டனர்.

கிண்ணியா பிரதேச செயலாளர் எம். அனஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் அதுல் கைசப், கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ ஆகியோர் கலந்து கொண்டு காணி உறுதிப் பத்திரங்களை வழங்கி வைத்தனர்.

DSC_4982 DSC_5069 DSC_5097

LEAVE A REPLY