(Video) வெல்லம்பிட்டியில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த முஸ்லிம்கள்

2
10

(இப்னு ஜமால்)

hakeemவெல்லம்பிட்டியில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக முஸ்லிம்கள் கிளர்ந்தெழுந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடுவதற்காக சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றது.

அமைச்சர் ரவூப் ஹக்கீமைக் கண்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள்; இவருக்கு எதிராக பேச ஆரம்பித்தனர்.

அந்த இடத்தில் இடம்பெற்ற சம்பாசனை

நபர் – 01 ‘ வெள்ளம் வந்து மூன்று நாளாவி செத்தாங்களா இருக்காங்களா என்று பார்க்க வாரியலா?
பண்டிக் குட்டியோ தெரியாது
நபர் – 02 அல்லாஹ்வை நம்புங்கப்பா
நபர் – 03அல்லாஹ்வை நம்பாமா யாரை நம்புற நீங்க?
நபர் -04 (…………………. ) தூசன வார்த்தைகள் பிரயோகிக்கப்படுகின்றன.
நபர் – 05 அல்லாஹ்வை பற்றியெல்லாம் பேசவாணாம். அமுக்கிடுவானுகள். பண்டியாயிடிச்சி அதுக்குப்பொறவு……..

இச்சம்பாசனை அமைச்சர் ஹக்கீமுக்கும் அவருடன் சென்றவர்களுக்கும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளம் ஏற்பட்டு உயிராபத்து நிலையில் முஸ்லிம்கள் துன்பப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அமைச்சர் தனது படைபட்டாளங்களுடன் சாட்டுக்காக சில நிவாரணங்களுடன் சென்றமை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு பலத்த ஆத்திரத்தை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

2 COMMENTS

    • முதல்ல இவர காங்ரஸ் தலைவர் பதவியில் இறுந்து தூக்கனும். இந்த சூழ்நிலையில கூட இப்படி இறுக்கிறார!!!அல்லாஹூ அக்பர்

LEAVE A REPLY