ஹக்கீம் ஹசனலி இடையிலான கருத்து முரண்பாடுகளுக்கு தீர்வு

0
845

hakeem Hasan Aliஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாயகம் எம்.ரி.ஹசன்­அ­லிக்கும் கட்­சிக்கும் இடையில் பல மாத­கா­ல­மாக நில­விய முரண்­பா­டுகள் உட்­பட அனைத்து உள்­ளக முரண்­பா­டு­க­ளுக்கும் தீர்வு காணப்­பட்­டுள்­ளன.

நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை இரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீ­முக்கும் செய­லாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலிக்­கு­மி­டையில் நடை­பெற்ற சந்­திப்பின் போதே அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு எட்­டப்­பட்­டுள்­ளது?

இச்­சந்­திப்பு இரு­வ­ருக்­கு­மி­டையில் பிரச்­சி­னை­களை பேச்­சு­வார்த்தை மூலம் சுமு­க­மாக தீர்த்து வைப்­ப­தற்­கென நிய­மிக்­கப்­பட்­டுள்ள தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் வேந்தர் ஏ.எம்.இஸ்­ஸாக்கின் இல்­லத்தில் கொழும்பில் இடம்­பெற்­றது.

தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தின் வேந்தர் ஏ.எம்.இஸ்ஸாக் இது தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில், எல்லாப் பிரச்­சி­னை­க­ளுக்கும் சுமு­க­மான தீர்வு காணப்­பட்­டுள்­ளது.

அனைத்துப் பிரச்­சி­னை­களும் தீர்க்­கப்­பட்­டு­விட்­டன. தலைவர் ரவூப் ஹக்­கீமும் செய­லாளர் நாயகம் ஹசன்­அ­லியும் வெகு­வி­ரைவில் கூட்டு அறிக்­கை­யொன்­றினை வெளி­யி­ட­வுள்­ளார்கள். அவ்­வ­றிக்­கையில் அனைத்து விட­யங்­களும் தெளி­வுப்­ப­டுத்­தப்­படும் என்றார்.

இதே­வேளை முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாயகம் ஹசன்­அலி மற்றும் கட்­சியின் அர­சியல் உயர் பீட உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்தும் இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டுள்ள மௌல­விகள் இரு­வ­ரது விவ­காரம் தொடர்­பாக பேச்­சு­வார்த்தை நடாத்­து­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள மூவர் கொண்ட குழு செய­லாளர் நாயகம் ஹசன்­அ­லிக்கும் தலைவர் ரவூப் ஹக்­கீ­முக்­கு­மி­டை­யி­லான சந்­திப்பில் மேற்­கொள்­ளப்­பட்ட தீர்­மா­னங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­த­வுள்­ளது.

2015 ஆம் ஆண்டின் இறு­தியில் கண்டி பொல்­கொல்­லயில் நடை­பெற்ற கட்­சியின் பேராளர் மாநாட்டைத் தொடர்ந்து தலை­வ­ருக்கும் செய­லாளர் நாய­கத்­துக்­கு­மி­டையில் முரண்­பா­டுகள் ஏற்­பட்­டன.

செய­லாளார் நாயகம் ஹசன்­அ­லி­யி­ட­மி­ருந்த அதி­கா­ரங்கள் சில அவ­ரி­ட­மி­ருந்து மீள­பெ­றப்­பட்டு மற்­று­மொ­ரு­வ­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டன. கட்­சியின் அர­சியல் உயர்­பீடம் மற்றும் பாரா­ளு­மன்ற விவ­கா­ரங்கள் தொடர்­பான அதி­கா­ரங்­களே ஹசன் அலி­யி­ட­மி­ருந்து கைமாற்­றப்­பட்­டன.

இதைத் தொடர்ந்து பால­மு­னையில் நடை­பெற்ற கட்­சியின் தேசிய மாநாட்டில் செய­லாளர் நாயகம் ஹசன்­அலி கலந்து கொள்­ள­வில்லை. இத­னை­ய­டுத்து முரண்­பா­டுகள் வலுப்­பெற்­றதால் தலை­வ­ருக்கும் செய­லா­ள­ருக்­கு­மி­டையில் நல்­லு­றவை ஏற்­ப­டுத்த வேந்தர் இஸ்ஸாக் நிய­மிக்­கப்­பட்டார்.

மேலும் கட்­சியின் மஜ்­லிசுஸ் சூரா தலைவர் மௌலவி ஏ.எல்.எம். கலீல் கட்­சியின் அர­சியல் உயர்­பீட கூட்­டங்கள் மூன்­றுக்கு சமு­க­ம­ளிக்­க­வில்லை எனவும் உலமா காங்­கிரஸ் பிர­தி­நிதி மௌலவி எச்.எம்.எம். இல்யாஸ் தலை­மைக்கு எதி­ராக சதி செய்­தா­ரெ­னவும் குற்றம் சுமத்­தப்­பட்டு இடை நிறுத்தம் செய்­யப்­பட்­டனர்.

இதே­வேளை இம்­மாதம் முதல் வாரத்தில் நடை­பெற்ற கட்­சியின் அர­சியல் உயர்­பீட கூட்­டத்தில் கட்­சிக்குள் ஏற்­பட்­டுள்ள முரண்பாடுகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்ப்பதற்கு மூவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது? இக்குழுவில் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீட உறுப்பினர்களான கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம்.ஏ.ரஸாக், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யூ.எல்.எம்.என். முபீன், சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

#Vidivelli

LEAVE A REPLY