கொஸ்டரிக்காவை சூழ்ந்து புகை மண்டலம்

0
159

Vol_CIலத்தின் அமெரிக்க நாடான கொஸ்டரிக்காவை புகை மண்டலம் சூழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எரிமலை குழம்பு காரணமாக இவ்வாறு நகரம் புகை மண்டலத்தினால் சூழ்ந்துள்ளது.

புகை சூழ்ந்துள்ளதனால் நூற்றுக் கணக்கானவர்கள் சுவாசப் பிரச்சினைகளை எதிர்நோக்கியதாகவும் பலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சில பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் விமான நிலையத்தில் விமானப் பயணங்களும் தடைப்பட்டுள்ளது.

மக்கள் இறுக்கமான ஆடைகளை அணிந்து கொள்ளுமாறும், மூக்கை மறைத்துக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY