கொழும்பு மாவட்டத்தில் இன்று மாலை வரை ஐவர் பலி

0
134

DMCகளனி கங்­கையின் நீர் மட்டம் அதி­க­ரித்தமையால் வெல்­லம்­பிட்­டிய, கொலன்­னாவை மற்றும் களனி பகு­தி­கள் உள்­ளிட்ட பிர­சே­தங்­க­ளி­ல் ஏற்பட்ட வெள்ளப்பெ­ருக்கு காரணமாக கொழும்பு மாவட்டத்தில் இதுவரை 32,924 குடும்­பங்­களை சேர்ந்த சுமார் 1,47,616 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது.

இது­வ­ரைக்கும் கொழும்பு நகரில் வெல்­லம்­பிட்­டிய மற்றும் கொலன்­னாவை பிர­சே­தங்­களே அதி­க­ளவில் பாதிக்­கப்­பட்­டன. குறித்த பிர­சே­தங்­களில் மாத்­திரம் 18 ஆயி­ரத்து 756 குடும்­பங்­களை சேர்ந்த சுமார் 94 ஆயி­ரத்து 151 பேர் 16 முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இதன்­பி­ர­காரம் கொழும்பு மாவட்­டத்தில் மாத்­திரம் 32,280 குடும்­பங்­களை சேர்ந்த சுமார் 1,45,198 பேர் 84 முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர். இதன்­பி­ர­காரம் கொழும்பு மாவட்­டத்தில் மாத்­திரம் 40,861 குடும்­பங்­களை சேர்­நத 1,81,708 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். மேலும் 32,280 குடும்­பங்­களை சேர்ந்த 1,45,198 பேர் இடம்­பெ­யர்ந்து 84 முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

-ET-

current-sitiation-1-1-768x414

LEAVE A REPLY