”விமானத்தில் ஏற்பட்ட தீ, விபத்திற்கு காரணமாக இருக்கலாம்”

0
112

160520092813_egypt_2863090hமத்திய தரைக்கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, 66 பயணிகளுடன் காணாமல் போன ஈஜிப்ட்ஏர் எம்எஸ் 804 விமானம் காணாமல் போவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், விமானத்தில் இருந்த புகை கண்டறியும் கருவி ஒன்று செயல்பட்டிருப்பதாக எகிப்திய அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.

ஈஜிப்ட்ஏர் எம்எஸ் 804 விமானம், தானியங்கி எச்சரிக்கைகளை வெளியிட்டதாக ஏவியேஷன் ஹெரால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த எச்சரிக்கைகளைத் தொடர்ந்து, சில மணித்துளிகளில், விமான ஓட்டியின் அறையில் இருக்கும் ஜன்னல்கள் திறந்ததாகவும், விமான கழிவறை மற்றும் விமானத்தின் கீழ் தளத்தில் புகை ஏற்பட்டதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

இதுதவிர்த்து, விமானத்தை இயக்கும் கணினிகளில் கோளாறு இருந்ததாகவும் ஏவியேஷன் ஹெரால்ட் கூறுகிறது.

” கிடைத்திருக்கும் தகவல்களை வைத்துப் பார்க்கும் போது, விமானம் கடத்தப்படவில்லை. விமானியின் அறையில் கோளாறு ஏற்படவில்லை. ஆனால், விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக உள்ளன. இந்த விபத்து, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் அல்லது வெடிகுண்டால் கூட நிகழ்ந்திருக்கலாம்” என்று கூறியுள்ளார் ஏவியேஷன் செக்யூரிட்டி இன் டர்நேஷன்ல் பத்திரிகையின் ஆசிரியர் பிலிப் பாம்.

-BBC-

LEAVE A REPLY