வங்கதேசத்தை நெருங்கும் புயல்: 5 பேர் பலி

0
91

160514092914_bangl_2863084hவங்கதேசத்தில் புயல் காரணமாக இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10 ஆயிரம் பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

வங்கதேசத்தை புயல் நெருங்கி வருவதால் அங்கு காற்று பலமாக வீசி வருகிறது.

பல பகுதிகளில் மரங்கள் விழுந்துள்ளன. சில இடங்களில் குடியிருப்புகள் மீது மரம் விழுந்து பொதுமக்கள் வீடுகளுக்குள் அடைப்பட்டுக் கிடக்கிறார்கள்.

பல துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன. கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு நீரின் அளவு உயர்ந்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், கடலோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 2 லட்சம் பேரை அப்புறப்படுத்தி பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக பங்களாதேஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY