பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருக்களை கிராம புற மக்களும் திரட்டிவருகின்றனர்.

0
131

(எம்.எம்.ஜபீர்)

மத்தியமுகாம் பிரதேசத்தில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணப் பொருக்கள் சேகரிக்கும் பணி மத்தியமுகாம் ஜீ.எம்.எம்.எஸ் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (21) காலை தொடக்கம் உலர் உணவு பொருக்கள் மற்றும் நிதி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுவருவதாக ஜீ.எம்.எம்.எஸ் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் றியாஜ் அஹம்மட் தெரிவித்தார்.

மத்தியமுகாம் அல்-மஸ்ஜிதுல் முஹைம்மதியா ஜூம்ஆப் பள்ளிவசல் நம்பிக்கையாளர் சபை, பிரதேச பொதுமக்கள், ஜீ.எம்.எம்.எஸ் பாடசாலை பழைய மாணவர்கள், விளையாட்டுக் கழகம், இளைஞர்கள், பொது மக்கள் ஒன்றினைந்து மக்களிடம் ஒன்றுதிரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்தார்.

கிராமப் புறத்திலுள்ள அதிகமான மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருக்கள் மற்றும் நிதிகளை ஆர்வத்துடன் வழங்குவதாகவும், இதனை பாதிக்கபட்ட மக்களுக்கு முழுமையாக சென்றடையும் வகையில் நிவராணப் பொருக்களை கையளிக்கவுள்ளதாக பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

0f6f1047-0b23-40af-b2c7-7e0c01025c25

3595a23a-7fec-45b9-8880-df9ddd3199e6

ac326f20-efd4-420b-b1f0-ab4ed9961450

f47cb261-8fc9-495d-94fb-f40ee1435e8b

LEAVE A REPLY