பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்றுக் காணிகளில் வீடுகள்: அமைச்சர் ஹக்கீம்

0
105

658ccaae-2887-4df0-8631-f4137b76fe42ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று சனிக்கிழமை (21) கடுகண்காவ, இலுக்குவத்தை, ரம்மலக கிராமத்திற்கு சென்று மண் சரிவினால் ஆறுபேர் உயிருடன் புதையுண்ட இடத்தைப் பார்வையிட்டார்.

எஞ்சியிருக்கும் வீடுகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை கண்டறிந்ததோடு, மக்களது அவசியத் தேவைகளையும் கேட்டறிந்தார். மழையினாலும் மண் சரிவினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள்களையும் வழங்கினார்.

மண் சரிவைத் தொடர்ந்து அச்சத்துக்கு உள்ளாகியிருக்கும் கிராமவாசிகளுக்கு சேத மதிப்பீட்டைப் பொறுத்து,

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். ஏ.ஆர்,ஏ. ஹபீஸ் ஆகியோரும் அமைச்சருடன் அங்கு சென்றிருந்தனர்.

LEAVE A REPLY