திருகோணமலை-சேறுநுவரயில் விபத்4து: இருவர் உயிரிழப்பு

0
93

accident-logoதிருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு 11 மணியளவில் திருகோணமலை சேறுநுவர பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் திருகோணமலை நோக்கி பயணித்த 24 வயதான இளைஞர்கள் இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

மூதூர் மற்றும் கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

திருகோணமலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லொறியில் மோதியுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் தற்போது சேருநுவர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#News1st

LEAVE A REPLY