(Photos) போதை மாத்திரைகளுடன் 19 வயதுடைய முஸ்லிம் இளைஞர் கைது!

0
54

(வாழைச்சேனை நிருபர்)

20160521_114541வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் வைத்து போதை மாத்திரைகளுடன் முச்சக்கர வண்டி ஒன்றும் அதன் உரிமையாளர் ஒருவரும் இன்று (21) காலை 11.30 மணியளவில் வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

போதைவஸ்து பாவனையை இல்லாதொழிக்கும் நோக்கில் பொலிஸ்மா அதிபரின் விஷேட திட்டத்திற்கு அமைய வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் விதானகேயின் வழிகாட்டலில் பொலிஸார் போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர்.

இதன் அடிப்படையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத்தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய சிறுவர்கள் மற்றும் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரி ஏ.அமீர் அலி தலைமையில் சென்ற குழுவினர் பிறைந்துரைச்சேனை அஸ்கர் பாடசாலை வீதியில் வைத்து குறித்த சந்தேக நபரை கைது செய்ததுடன் மாத்திரைகளையும் மாத்திரைகளை மறைத்து வைத்திருந்தத முச்சக்கர வண்டியையும் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபரிடம் இருந்து TRAMADOL மாத்திரைகள் 50, NEUROUAN மாத்திரைகள் – 880, TRAMOJET – 1100 மாத்திரைகள் பணம் 3400.00 என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் பிறைந்துரைச்சேனை முஹம்மதியா வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபருடன் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் இன்னும் பலர் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

20160521_112534 20160521_112547 20160521_113223 20160521_113238 20160521_113244 20160521_113308 20160521_114559 20160521_114613

LEAVE A REPLY