புயல் காற்றினால் இலங்கைக்கு பாதிப்பு கிடையாது

0
112

Cyclone-Roanu-Tamil-Nadu-Cyclone-Near-Machili-Patnam-Andra-coastalபுயல் காற்றினால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாது என வளிமண்டலவியல் திணைக்களத்தின் அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோவானு என்னும் புயல் காற்று இலங்கையை தாக்கும் என முன்னதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாகவே இலங்கையில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காங்கேசன்துறையிலிருந்து 950 கிலோ மீற்றர் தொலைவில் வங்களா விரிகுடாவில் மையம் கொண்டிருந்த புயல் மேலும் அகன்று சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்னும் இரண்டு தினங்களில் மழையுடன் கூடிய காலநிலையில் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எவ்வாறெனினும், வடமேற்கு, மேற்கு, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY