காலத்தின் தேவையும் இன்றைய நிலையும்..

0
263

(அபூ உமர் அன்வாரி)

t1larg.sri.lanka.afp.giமனிதன் எத்தகைய ஆற்றல் பெற்றிருப்பினும் அதை விட ஒரு சக்தி இருப்பதை ஒவ்வொரு ஆத்மாவும் ஏற்க வேண்டியுள்ளதை உலக நிகழ்வுகள் உணர்த்துகின்றன. இது இவ்வாறு இருக்க காலத்துக்கு காலம் மாறி வரும் அனர்த்தங்களின் போது அழிவுகளும், சேதங்களும் எச்சங்களாக எஞ்சிய சம்பவங்கள் ஏறாலம்.

இன்று இலங்கை இன்னொரு சுனாமி என கொள்ளுமளவு ஒரு அனர்த்த சூழ்நிலையை கடந்து கொண்டிருப்பதை உலகமறியும். இதன் போது ஒவ்வொரு உள்ளத்திலிருந்தும் மனித நேயம் வெளிப்பட வேண்டும். இது இயற்கையானது இஸ்லாமும் இதை அதிகம் ஆர்வமூட்டுகின்றது.

இது ஒரு அளப்பரிய ஒரு நன்மையை ஈட்டித்தரக்கூடியது. இதன் வெளிப்பாடுகள் வெளிப்படுவதை பார்க்கும் போது உள்ளம் சாந்தியடைகின்றது. இதன் போது ஒவ்வொரு மனிதனும் தன்னால் இயன்ற உதவிகளை செய்வது கட்டாயம், குறைந்தளவு உள்ளத்தால் உறுகி பாதிக்கப்பட்டவர்களுக்கு கையேந்தி பிரார்த்திக்க வேண்டும்.

இன்று தப்பியவர்கள் நாளை சிக்கலாம். இலங்கைக்கு முன் இந்தியா பிந்தியது இலங்கை. இது இவ்வாறு இருக்கின்ற தனக்கு மிஞ்சிதையும், தன்னிடம் உள்ளது பிறருக்கு மிகவும் தேவை என காணும் போதும் அதை வழங்குவது மிகப்பாரிய கொடையாகும். இத்தகையவர்களை அல்லாஹ் குர்ஆனில் சிலாகித்து குறிப்பிடுகின்றான்.

ஒரு ஹதீஸில் “மனிதர்களில் சிறந்தவர் மனிதர்களுக்கு பயனுடையவர்” என நபிகளார் குறிப்பிட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு பயனுடையவர்களாக இருக்கும் போது சிறந்த மனிதர்களாகலாம். தாகத்தால் தவித்த ஒரு நாயிக்கு நீர் புக்கட்டிய ஒரு விச்சாரப்பெண்ணை அல்லாஹ் மண்ணித்தான்,(நூல் முஸ்லிம்). இது இவ்வாறு இருக்க தண்ணீரில் தவிக்கும் உள்ளங்களுக்காக குடிநீரை புகட்டினால் கட்டாயம் அல்லாஹ் பொறுந்திக்கொள்வான். இன்னும் தேவையுடையவர்களுக்கு உதவிகள் தர்மங்கள் செய்வதானது அல்லாஹ்வின் கோபத்தை தனிக்கும்,தீய விளைவுகளை விட்டும் தடுக்கும்.

ஒரு தடவை நபிகளார் தர்மத்தை வழியுறுத்தி பிரச்சாரம் செய்யும் போது அவர்களால் முடிந்தவைகளை கொண்டுவந்தனர். இதன் பயன் உதவிகளின் குவியல்கள் மலைபோல் நிற்க அதற்கு வித்திட்டவர் அளப்பரிய நன்மையை அடைகின்றார். பெண்களும் அவர்களது ஆபரணங்களை கூட களற்றி கொடையாக கொடுத்தனர்.

இதுவெல்லாம் மனித நேயம், உதவி செய்ய வேண்டும் எனும் தூய எண்ணம்.ஹிஜ்ரத்தின் போது அனைத்தையும் இழந்தவர்களை அரவனைத்து உதவி, உலகத்தில் ஒரு சாதனையை நிலை நாட்டிய ஒரு சமூகமாக திகழ்கின்றது. இன்றைய நிலையில் மேலதிக தேவைகள் குறைக்கப்பட்டு அத்தேவைகளில் அதிகமானவைகளை பாதிப்புற்ற அனைத்து சகோதரர்களுக்கும் சென்றடைய வழிச்செய்தல் காலத்தின் தேவை.

உதவி செய்வதற்கு அரசியல், இனம், மதம், பால் என்பனவற்றை கடந்து மனித நேயம்முன்னிலை வகிக்க வேண்டும். இன்று அனைத்து பிரிவினர்ளிலும் கலத்தில் குதித்துள்ள அனைத்து மட்டத்திலும் உள்ள அனைவருக்கும் உதவி ஒத்தாசை புரிந்து உதவிகள் சென்றடைய ஒவ்வொருவரும் தன்னால் இயன்ற முயற்சிகளை செய்வதும் ஒரு பாரிய உதவியாகும்.

தற்போதைய இந்த கஷ்டமான நிலை மாறி பாதிப்புற்ற அனைவரும் இருந்த நிலையை விட மிசக்சிறப்பான ஒரு நிலையை அடையவும், இதன் போது முன்வந்து மனமவந்து செயற்பட்ட செயற்படும் அனைவருக்கும் இவ்வுலக மறுவுலக நற்கூலி கிடைக்க இரு கையேந்தி வேண்டிக்கொள்கின்றேன்.

LEAVE A REPLY