மல்வானை பிரதேசத்தில் 12 அடிவரை நீர்மட்டம் : மக்கள் பரிதவிப்பு

0
120

image_1463637412-2bf940b46cநாட்டில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த சீரற்ற காலநிலை காரணமாக மல்வானை பிரதேசம் முற்றாக நீரில் மூழ்கியதோடு மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மல்வானை பிரதேசத்தின் ரக்ஷபான, காந்திவெவ, உலஹிட்டிவல, விதானகொட, பங்காளஹேன, உட்பட பல பகுதிகள் நீரில் முழ்கியுள்ளன. சீரற்ற காலநிலை வழமைக்கு திரும்பியுள்ள போதும் குறித்தப் பகுதிகளில் சுமார் 12 அடி வரை நீர்மட்டம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட 2500க்கு அதிகமான குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள போதும் இதுவரை அரசியல்வாதிகள் எவரும் வந்து தம்மை பார்வையிடவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

-VK-

LEAVE A REPLY