கொழும்பு மாவட்டத்தில் 76 முகாம்­களில் 1,61,943 பேர்

0
174

DMCகளனி கங்­கையின் நீர் மட்டம் அதி­க­ரிக்க தொடங்­கி­ய­தனை அடுத்து கொழும்பில் வௌ்ளப்­பெ­ருக்கு ஏற்­பட்ட பிர­தே­சங்­களின் நீர் மட்டம் பன்­ம­டங்கு அதி­க­ரித்­துள்­ளது.

இதனால் கொழும்பு நகரின் வெல்­லம்­பிட்­டிய, கொலன்­னாவை மற்றும் களனி பகு­தி­கள் உள்­ளிட்ட பிர­சே­தங்­க­ளி­ல் வெள்ளப்பெ­ருக்கும் பன்­ம­டங்கு அதி­க­ரித்­தது. குறித்த பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து மக்கள் தொடர்ந்தும் வெளி­யே­றிய வண்ணம் காணப்­பட்­டனர். இதனால் கொழும்பு மாவட்­டத்­தில் அதி­க­ள­வி­லான சேதம் ஏற்­பட்­டுள்­ளது.

இருந்­த­போ­திலும் 200 குடும்­பங்கள் வௌ்ளத்தில் சிக்­குண்டு பாது­காப்­ப­தற்கு எவ­ரு­மின்றி தத்­த­ளித்­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. இது­வ­ரைக்கும் கொழும்பு நகரில் வெல்­லம்­பிட்­டிய மற்றும் கொலன்­னாவை பிர­சே­தங்­களே அதி­க­ளவில் பாதிக்­கப்­பட்­டன.

குறித்த பிர­சே­தங்­களில் மாத்­திரம் 18 ஆயி­ரத்து 756 குடும்­பங்­களை சேர்ந்த சுமார் 94 ஆயி­ரத்து 151 பேர் 16 முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர். இதன்­பி­ர­காரம் கொழும்பு மாவட்­டத்தில் மாத்­திரம் 40,861 குடும்­பங்­களை சேர்­நத 1,81,708 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

மேலும் 36,557 குடும்­பங்­களை சேர்ந்த 1,61,943 பேர் இடம்­பெ­யர்ந்து 76 முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

-ET-

LEAVE A REPLY