புதிய அரசியலமைப்புக்கான தீர்வுத் திட்ட முன்மொழிவுகளை கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்க கோரும் தனிநபர் பிரேரணை

0
129

(றிசாத் ஏ காதர்)

93b4b3af-2fcb-4455-8438-2a9bc505a608பொத்துவில், மூதூர், குச்சவெளி ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் உப – அலுவலகங்களை நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயங்களாக தரமுயர்த்த கோரும் தனிநபர் பிரேரனை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பையினால் சமர்ப்பிப்பு.

பொத்துவில், மூதூர், குச்சவெளி ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் உப – அலுவலகங்களை நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயங்களாக தரமுயர்த்த கோரும் தனி நபர் பிரேரனை கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பையினால் கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்…

கிழக்கு மாகாணத்தில் வாழும் மூவின விவசாயிகளின் நலன் கருதி 14/RD/121/2009 ம் இலக்க கிழக்கு மாகாண அமைச்சரவையின் அங்கீகாரத்துக்கு அமைவாக பொத்துவில் பிரதேசத்துக்கான நீர்ப்பாசன உப- காரியாலயம் சென்ற 2009.09.29 ம் திகதியும், மூதூர் நீர்ப்பாசன உப – காரியாலயமும், குச்சவெளி பிரதேசத்துக்கான உப – நீர்ப்பாசன காரியாலயமும் சென்ற 2010.01.16 ம் திகதியும் திறந்து வைக்கப்பட்டது.

இவ் நீர்ப்பாசன உப- அலுவலகங்கள் கடந்த 07 வருட காலமாக சிறப்பாக இயங்கி வருவதுடன், கிழக்கு மாகாணத்தில் வாழும் விவசாய குடும்பங்களின் வருமாண அதிகரிப்புக்கும் உறுதுணையாக அமைந்துள்ளது. இச்சேவையினை மேலும் திறம்பட செய்வதற்கு தற்போது பொத்துவில், மூதூர், குச்சவெளி பிரதேசங்களில் நீர்ப்பாசன உப – அலுவலகங்களாக இயங்கி வரும் அலுவலகங்களை நீர்ப்பாசப் பொறியியலாளர் அலுவலகங்களாக தரமுயர்த்துவதன் ஊடாக மேலும் சிறந்த சேவையை வழங்கலாம் என்பதனை கருத்தில் கொண்டு குறித்த 03 அலுவலகங்களையும் நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகமாக தரமுயர்த்துவதற்கு கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை 2014 ஆம் ஆண்டில் அனுமதி வழங்கியுமும் இதுவரைக்கும் எதுவிதமான நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படவில்லை.

கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன அமைச்சின் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்ற போது பொத்துவில், மூதூர், குச்சவெளி நீர்ப்பாசன உப – காரியாலயங்களை ஏற்கனவே தரமுயர்த்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றும் இதுவரையும் இது தொடர்பான எந்த முன்னெடுப்புகளும் எடுக்கப்படாமல் உள்ளது குறித்து தெரியப்படுத்திய போது விரைவில் இவ் 03 அலுவலகங்கள் தரமுயர்த்த நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டும் இதுவரையும் பொத்துவில், மூதூர், குச்சவெளி பிரதேசங்களில் அமைந்துள்ள நீர்ப்பாசன உப – அலுவலகங்களை தரமுயர்த்துவதற்கான எதுவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என தெரியவருகிறது.

எனவே, இவ் மூன்று(03) உப – நீர்ப்பாசன காரியாலயங்களையும் நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயங்களாக தரமுயர்த்துவதற்கான அவசர நடவடிக்கைகளை கிழக்கு மாகாண சபையும், கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன அமைச்சும் மேற்கொள்ள வேண்டும் எனக் கோரியே இத்தனிநபர் பிரேரனையை எதிர் வரும் 24ஆம் திகதி கிழக்கு மாகாண சபை அமர்வின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பையினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY